Gnani Photo
  beta

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்

An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

மன்னிப்போம். மறக்கமாட்டோம்.

முதல் பக்கம்...

 

இந்தக் கருத்தைத் தொடர்ந்து பல விதமாகத் திரித்தும் குஷ்பு அடுத்தடுத்து சொன்னவற்றையும் திரித்தும் அவ்ருக்கெதிராக தமிழ்க் கலாசாரக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே தமிழ் மக்கள் மீது திணித்துக் கொண்ட சில சந்தர்ப்பவாதிகள் போராட்டங்கள் நடத்தினார்கள். தமிழ் நாட்டின் வெவ்வேறு ஊர்களில் மொத்தமாக குஷ்பு மீது 23 வழக்குகளைத் தொடுத்தார்கள்.

 

இந்த அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கும் உச்ச நீதி மன்றத்தின்  தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக் வர்மா, பி.எஸ் சௌஹான் ஆகியோர் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்வது கிரிமினல் குற்றமாகாது. குஷ்பு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பற்றி சொன்னவை சர்ச்சையை ஏற்படுத்தலாம். அந்தக் கருத்தை ஏற்காதவர்கள் அநேகர் இருக்கலாம். ஏற்கிறவர்களும் இருக்கிறார்கள். திருமணம், குடும்பம், ஒழுக்கம் பற்றிய கருத்துகள் நிலையானவை அல்ல.மாறக்கூடியவை. நபருக்கு நபர் வேறுபடக் கூடியவை. ஆனால் கருத்துகளைச் சொல்வது குற்றமாகாது. அதற்கான கருத்துச் சுதந்திரம்  ஒவ்வொருவருக்கும் உண்டு. 

 

இந்தியா டுடே தமிழ் இதழின் செக்ஸ் பழக்கங்கள் பற்றிய சர்வே சிறப்பிதழுக்கு அளித்த பேட்டியில் குஷ்பு சொன்னது என்ன ?

 

என்னைப் பொறுத்த வரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல. அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது.  வாரந்தோறும் பாய் பிரெண்டை மாற்றிக் கொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லைஒரு பெண் தன் பாய் பிரெண்டைப் பற்றி உறுதியாக் இருக்கும்போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே வெளியே போகலாம்நான் காதலித்த நபரைத் திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம்.. ” என்பதுதான் குஷ்பு சொன்னவை. யாரானாலும் பாதுகாப்பான செக்ஸ் அவசியம் என்பதுதான் குஷ்பு மேற்கொண்டு வலியுறுத்திய கருத்து. இப்போதெல்லாம் படித்த ஆண்கள் யாரும் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண் இதற்கு முன்பு உறவில் ஈடுபடாத வர்ஜினாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பது குஷ்புவின் இன்னொரு கருத்து.

 

இதுபற்றி தினந்தந்தி கேட்ட கேள்விக்கு, “இன்றைக்கு  திருமணத்துக்கு முன்னால் உறவு வைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதுஎன்று குஷ்பு சொன்னார்.

 

இந்தக் கருத்துகள் திரிக்கப்பட்டன.  .

 

ஐந்து வருடங்களுக்கு முன்னால் குஷ்புவுக்கு எதிராகவும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகவும் நடந்த அராஜகங்களை நினைவுபடுத்திக் கொள்வது நம் எல்லாருக்கும் நல்லது. ஏனென்றால் நம் சமூகத்தின் மீதே செலக்டிவ் அம்னீஷியா என்ற நோய்க் கிருமியைத் திணிப்பது பொது வாழ்க்கையில் அரசியலில் இருப்பவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு.

 

அப்போது குஷ்புவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் சன் டி.வி, தமிழ் முரசு ஏடு, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான், தங்கர் பச்சான்,பழ. கருப்பையா முதலானோர்.

 

ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு பல பேருடன் உறவு வைக்கலாம் என்று குஷ்பு சொல்லியதாகப் பொய்யாக எழுதிக்   கண்டித்தார் பழ. கருப்பையா.  சன்.டி.வியும் தமிழ் முரசும் குஷ்புவுக்கு எதிராக ராமதாஸ், திருமாவளவன் கட்சியினர் நடத்திய போராட்டங்களைப் பிரும்மாண்டமாக ஆக்கிக் காட்டி தொடர்பிரசாரம் செய்தன.

 

குஷ்பு வீட்டுக்கு திருமாவளவன் கட்சியினர் கழுதை ஊர்வலம் நடத்தினார்கள். நடிகர் சங்கத்தின் முன் ஆர்ப்பாட்டம் என்று சொல்லி துடைப்பக் கட்டைகளை சிலர் வீசினார்கள். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் கூட சாதுர்மாஸ்ய விரதத்தின்போது கோர்ட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்னால் ஒப்புக் கொள்கிற உள்ளூர் கோர்ட்டுகள், குஷ்புவுக்கு பிடி வாரண்ட் அனுப்பின.

 

நடந்ததெல்லாம் தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் என்று சப்பைக்கட்டு கட்டினார் திருமாவளவன். நாங்கள் நேரடியாக இறங்கியிருந்தால்  என்ன ஆகியிருக்கும் தெரியுமா என்று ராமதாசும் திருமாவளவனும் கேட்டார்கள்.

 

தன்னெழுச்சியாகப் போராடுகிறவர்களுக்கு எங்கிருந்து கழுதைகளைத் திரட்டிக் கொண்டு வருவது என்றெல்லாம் தெரியுமா என்ன ?    கழுதையும் துடைப்பக்கட்டையும் சலவை தொழிலாளர்களும் துப்புரவுத்தொழிலாளர்களும் உபயோகிப்பவை. இவற்றை ஒருவரை இழிவுபடுத்துவதற்கான குறியீடுகளாகப் பயன்படுத்துவது உண்மையில் அந்தத் தொழில்களையும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்துவதேயாகும். மேலவளவில் தலித்தைக் கொலை செய்தவர் வீட்டுக்கோ திண்னியத்தில் தலித் வாயில் மலம் திணித்தவர் வீட்டுக்கோ போய் ஆர்ப்பாட்டம் நடத்தாத தலித் காவலர்கள் குஷ்பு வீட்டுக்குப் போனார்கள். இவர்கள் யாரும் குஷ்பு பேட்டியை வெளியிட்ட பத்திரிகை வாசலுக்குப் போகவில்லை.

 

குஷ்பு பேச்சால் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்ன தங்கர் பச்சான் தனக்கு முன்னர் நேர்ந்த அவமானம் இப்போது எல்லா தமிழர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது என்றார். இவருக்கு ஏற்பட்ட அவமானம் என்ன ? ஒரு நடிகையுடனும் சிகை அலங்கரிப்பாளருடனும் சமபளம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காசுக்கு வேலை செய்யும் நடிகையும் விபசாரம்தான் செய்கிறார் என்று பொருள்பட சொன்னதற்கு நடிகைகள் குஷ்பு சுஹாசினி எல்லாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர் மன்னிப்பு கேட்க வேண்டி வந்தது. இதைத்தான் அவமானம் என்றார்.

 

குஷ்புவைத் தமிழ் நாட்டை விட்டு வெளியே போ என்றெல்லாம் சொன்னார்கள். இதைக் கண்டித்துவிட்டு தமிழர்கள் சார்பாக குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட சுஹாசினியை அவர் தமிழச்சியே அல்ல, கைபர் கணவாய் வழியே வந்தவர் என்ற கருத்தை உதிர்த்தார் சீமான். இவர் அப்போது அதே கணவாய் வழியே வந்த மாதவனைத் தன் படங்களில் நடிக்க வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்ததை செலக்டிவ் அம்னீஷியாவில் தமிழர்கள் மறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான்.

 

குஷ்புவை தாங்கள்  முஸ்லிமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். குஷ்புவுக்கு நிகராக பாலியல் விஷயங்களில் கருத்து தெரிவிக்கும் படைப்பாளி கவிஞர் சல்மா முஸ்லிமா இல்லையா என்று அக்மார்க் முத்திரை எதையும் .மு.மு. அறிவிக்கவில்லை. நடிகர் சங்கத்திலிருந்து சரத் குமார் சுஹாசினியிடம் விளக்கம் கேட்கப் போவதாக அறிவித்தார்.

 

ஊர் ஊராக வழக்கு தொடுத்து குஷ்புவை தமிழ் கலாசாரக் காவலர்கள் எல்லாரும் அலைக்கழித்துக் கொண்டிருந்தபோது குஷ்புவை வைத்து நிகழ்ச்சி நடத்தி காசு பார்த்த ஜெயா டி.வி வாயைத் திறக்கவில்லை. .தி.மு. கட்சியும் வாய் திறக்கவில்லை.இப்போது குஷ்புவைத் தங்கள் டி.விகளில் பயன்படுத்திவரும் தி.மு. தலைமையும்  அப்போது இந்தப் பிரச்சினையில் வாய் திறக்கவில்லை.

 

குஷ்பு சார்பாகவும் கருத்துச் சுதந்திரத்துக்காகவும் அப்போது குரல் கொடுத்தவர்கள் யார் யாரென்றும் நாம் இப்போது நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். முதல் குரல்கள் என்னிடமிருந்தும் சமூக ஆர்வலர் .மார்க்ஸ்,, வழக்கறிஞர் ரஜினி, களப் பணியாளர் ஷெரீபா ஆகியோருடையவைதான்.  .மார்க்ஸ் எழுதிய துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த நீலகண்டன் திருமாவின் ஆதரவாளர்கள் தாக்குதலுக்குள்ளானார்.

 

அடுத்தடுத்து பேராசிரியை சரஸ்வதி, சாரு நிவேதிதா, லீனாமணிமேகலை, பிரீதம் சக்ரவர்த்தி, ஆனந்த் நடராஜன், வாஸந்தி, மாலன்,கனிமொழி, .சிதம்பரம், சோ ஆகியோர் ஆதரித்தார்கள். பின்னர் ஜனநாயக மாதர் சங்கம், பெரியார் திராவிடர் கழகம், தலித் முரசு இதழ் முதலியோர்  வந்தார்கள். ஒவ்வொருவரின் ஆதரவும் வெவ்வேறு அளவிலானது என்றபோதும் அத்தனை பேரும் குஷ்புவின் கருத்துச் சுதந்திர உரிமையை ஆதரித்தார்கள்.

 

இப்போது உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு சொல்லிவிட்டது. ‘‘ பாதுகாப்பான உடலுறவு பற்றி பகிரங்கமாக விவாதியுங்கள். நமது இளைஞர்கள் எய்ட்சுக்கு பலியாகாமல் காப்பாற்ற இந்த பகிரங்கமான கருத்துப் பரிமாற்றம் தேவை’’ என்று டிசம்பர் 1,2005 எய்ட்ஸ் தினத்தன்று அப்போதைய அமைச்சர் அன்புமணியை அருகில் வைத்துக் கொண்டு தேசத்துக்கு விடுத்த வேண்டுகோளைத்தான் இப்போது உச்ச நீதி மன்றமும் இன்னொரு வடிவில் உறுதி செய்கிறது.

 

ஆனால் ராமதாஸ், திருமாவளவன், சன் டிவி, தமிழ் முரசு ஏடு,பழ. கருப்பையா, சீமான், தங்கர் பச்சான்,சரத் குமார், .மு.மு.,தி.மு., .தி.மு. எல்லாரும் உரத்த மௌனத்தில் இருக்கிறார்கள்.

 

கருத்துச் சுதந்திரம் பற்றிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா ? இல்லையா ? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால்,  உங்கள் கடந்த கால அராஜகங்களுக்காக குஷ்புவிடமும்,  சுஹாசினியிடமும், அவர்களை ஆதரித்த எங்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்.

 

நீதி மன்றத் தீர்ப்பை ஏற்கவில்லையேன்றால் அதையாவது சொல்லித்  தொலையுங்கள். உங்கள் அசல் முகங்களை நாடு தெரிந்துகொள்ளட்டும்.

 

(இதில் சில வரிகள் குமுதம் இதழில் இடம் பெறவில்லை.)

 

இந்த வாரப் பூச்செண்டு

 

தெருக்களில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட அநாதைகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர ஏற்பாடு செய்திருப்பதற்காகவும் உறுப்பினர் பதவிகளில் மகளிருக்கு 50 சத விகித இட ஒதுக்கீடு அளித்திருப்பதற்காகவும் சென்னை மாநகராட்சிக்கு .வா.பூ. இதே போன்ற நடவடிக்கையை எல்லா உள்ளாட்சி அமைப்புகளும் பின்பற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் உத்தரவிடவேண்டும்.

 

இந்த வாரத் திட்டு

 

அரசின் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களுக்கு உழைப்பாளர் தினமான மே தின விடுமுறை அளிக்க வேண்டுமென்று உயர் நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கும் தமிழக அரசுக்கு .வா.தி.

 

இந்த வாரப் பொன்மொழி

 

பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக் கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால் அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண்மையிலேயே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திக வாதியாக இருந்தாலும், பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும், இரட்டை மனிதனாக இருக்கக்கூடாது.

 

- – முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, டெல்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவில்.

 

 

குமுதம் 3.5.2010


18 Responses to “மன்னிப்போம். மறக்கமாட்டோம்.”

  1. suja2 says:

    கிட்ட தட்ட ஒன்றேகால் வருடங்கள் கழித்து இங்கு என் கருத்தை சொல்கிறேன். கற்பு என்பது மனம் சம்பந்தபட்டது என்றாலும், இதன் தன்மை சொல்ல குஷ்பூ போன்றோர் களுக்கு நிச்சியம் உரிமை இல்லை.

  2. srinivasan0808 says:

    I purely welcome Mr. Vigneshkumar\’s comments. Coz everyone has own point of view. at the same time we have to agree the fact with bold. Good Mr. Vigneshkumar

  3. vigneshkumar says:

    நீதிபதிகள் மிக தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள் திருமனம் குடும்பம் ஒழுக்கம் பற்றிய கருத்துக்கள் நிலையானவை இல்லை ,நபருக்கு நபர் மாரக்கூடிய்வை என்பது மிகவும் சிரந்த ஜனனாயகம் வாய்ந்த கருத்து.
    தமிழ் நாடு உயர் நீதி மண்றத்தில் இது போல் கருத்துக்களை எதிர்பார்க்க முடிமா? பாட்டையா போன்றவர்கள் பொதுமை உழரலை விமர்சிப்பதில் இவைகளை பாராட்டதவரிவிட்டேன்.
    குடும்பம் அமைப்பு மனிதன் எல்லாம் ஒரே குட்டையில் கூரிய மட்டைய இல்லை என்றும் மணிதர்களுக்குள் குடும்ப ஒழுக்கம் மாற்று சிந்த்னை இருக்கும் என்ற ரீதியில் சொன்னது பாராட்டத்தக்கது.பாட்டையா போன்ற பொதுமை அப்பத்த வாதிகளுக்கும் பொருந்து.
    தமிழ் கதை வசன சூழலில் சில அறுகதை அற்றவர்கள் குடும்பம் என்றால் ஒரே மாதிரியானது என்ற ரீதியில் வாதிப்பது கேல்விக்கு உரியது

  4. vigneshkumar says:

    பாட்டையாவின் வாதம் குறித்து கேல்விகள்.
    கற்பு இல்லை என்றால் எந்த மாமியாரும் ஏற்பார்களா?
    என்ற ரீதியில் பாட்டையா கேட்கின்றார்.
    குஸ்புவுக்கும் குஸ்பு போன்ற பெண்களுக்கும் மாமியார் மாமனார் இல்லையா? மாமியாருக்கும் மாமியார் மாமனாறுக்கு மாமனார் கருத்து வேறுபாடு இருக்காதா?
    குஸ்புவை உழரல் என்கின்றார், பாட்டையா குஸ்பு ஆறு வருடங்களாக சின்ன வீடாக இருந்தவர் என்று இவர் எப்படி சொல்கின்றார்.
    மாமியார் மாமனார் ஒருவிடையத்தை ஏற்க்க மாட்டார்கள் என்பதற்காக குஸ்பு கருத்துசொல்லாமல் இருக்கமுடியுமா? பாட்டையா ஏற்க்கவில்லை என்பதற்காக கருத்துசொல்லாமல் ஒடுங்கி இருக்க முடியுமா?
    நியாயம் கேட்கும் பாட்டையா மறுமகன் மாப்பிள்ளை கற்புகரசனா கற்பு இழக்காதவனா ? அவர்களை எப்படி எந்த அடிப்படையில் ஏற்றுகொள்கின்றார்கள் மாமனார் மாமியார்கள் என்பது பற்றி எழுதவில்லை.
    குஸ்பு இருண்ட வாழ்கை உடையவர் என்கின்றார் அதுவே அவர் கற்பித்தனங்களுக்கு எதிராக பேச அறுகதை,
    குஸ்பு போன்ற பெண்கள் கருத்துரிமைக்கு எதிராக நடக்கும் அராஜகம் கண்டாயம் கண்டிக்கத்தக்கது. கருத்துரிமைக்கு எதிராக அறுகதை அற்றவர்கள் நடத்தும் அராஜகம் மட்டும் அல்ல அவர்கள் கருகதையும் விமர்சனத்திற்கு உரியது.
    கற்பித்தனக்கட்டுப்பெட்டி அமுக்குராஜா அராஜக தடைகளுக்கு எதிராக குஸ்பு மற்றும் தமிழ் பெண்கள் தங்கள் கற்பு கற்பித்தனங்களுக்கு எதிராக தங்களுக்கு இருக்கும் கருத்துகளை தெறிவிப்பது பாராட்டத்தக்கது.
    தார்மிக அறுகதை இல்லாத அராஜக பண்பாட்டு வாதிகள் தான் அராஜக வேலைகளை மூடி முடக்கிகொண்டு இருக்கவேண்டும். குஸ்பு போன்ற பெண்களை மவ்னமாக இருக்க தேவை இல்லை.
    என்னை பொருத்தவரை ஒழுக்கம் என்ற பெயரில் தார்மிக அறுகதை இல்லாமல் ஈராரை கொடுமை படுத்துபவன் ஏமாற்றுபவன் தான் முக்கிய அயோக்கியன்.

  5. vigneshkumar says:

    பாட்டையா போன்றவர்களின் கருத்துரிமைக்கு எதிரான கற்பித்தன கட்டுப்பெட்டிகளின் வாதங்கள் அடிப்பாடை நனனாயக முறை அடிப்படை மனித நியது இவைகளுக்கு எதிரான சர்வாதிகார ஆணாதிக்க அராஜம சார்ந்த்து.

  6. bharathialive says:

    இந்திய டுடே இதழில் வெளியான கருத்து கணிப்பில் செக்ஸ் சம்பதமான கேள்வியில் பதில் அளித்த குஷ்பூ தமிழகத்தில் உள்ள பெண்களும் திருமணதிற்கு முன்பே உறவு வைத்து கொள்கின்றார்கள் என்று கூறியிருந்தார் அவரின் இந்த பேட்டிக்கு தமிழகத்தின் கலாசார காவலகர்கலான ராமதாஸ் , திருமாவளவன் போன்றோர் குஷ்பூவின் பேச்சுக்கு எதிராக பல அநாகரிக ஊர்வலங்களை நடத்தினர். விளக்குமாறால் அடித்தும், கழுதை ஊர்வலம் நடத்தியும் தமிழக பெண்களின் கற்பின் காவல் அரண்களாக விளங்கினர் , இது சாதரணமாக பார்த்தல் கேலிக்குரிய விசயமாக தெரியும் , ஆனால் இது உண்மையிலே பேச்சுரிமைக்கும் தனிநபர் சுதந்திரதிருகும் விடப்பட்ட சவால் ஆகும். இந்த நாட்டில் நமது அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 21 மற்றும் சரத்து 19 ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் வகையில் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோரின் நடவடிக்கைகள் இருந்தன இது போன்று ஒருவர் சொன்ன கருத்திற்காக அவரை மன்னிப்பு கேட்க்க சொல்வதும் அவரை வேறு பல வகையில் துன்புர்த்துவதும் சமுக நீதிக்கு எதிரனதகவும் ப்ஜ்ப் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு சாதகமானதாகவும் எதாவது யாராவது இந்து கடவுளையோ , சமியார்களையோ நாம் விமர்சனம் செய்தால் கூட அதற்க்கு எதிராக உன் தலையை எடுத்து விடுவேன் , உன் நாக்கை அறுத்து விடுவேன் என்று சொல்ல கொடிய நிலையை இந்த போக்கு கொண்டு வந்து விடும் என்பது மறக்க முடியாத உண்மை. இது போன்ற பாசிச போக்குகளுக்கு நாம் எப்போதும் எதிராகவே இருக்க வேண்டும்
    பொச்ட் ச்ச்ரப் சன்செல்

  7. bharathialive says:

    போலி கலாசாரவாதிகளுக்கு சம்பட்டி அடி.

    இந்திய டுடே இதழில் வெளியான கருத்து கணிப்பில் செக்ஸ் சம்பதமான கேள்வியில் பதில் அளித்த குஷ்பூ தமிழகத்தில் உள்ள பெண்களும் திருமணதிற்கு முன்பே உறவு வைத்து கொள்கின்றார்கள் என்று கூறியிருந்தார் அவரின் இந்த பேட்டிக்கு தமிழகத்தின் கலாசார காவலகர்கலான ராமதாஸ் , திருமாவளவன் போன்றோர் குஷ்பூவின் பேச்சுக்கு எதிராக பல அநாகரிக ஊர்வலங்களை நடத்தினர். விளக்குமாறால் அடித்தும், கழுதை ஊர்வலம் நடத்தியும் தமிழக பெண்களின் கற்பின் காவல் அரண்களாக விளங்கினர் , இது சாதரணமாக பார்த்தல் கேலிக்குரிய விசயமாக தெரியும் , ஆனால் இது உண்மையிலே பேச்சுரிமைக்கும் தனிநபர் சுதந்திரதிருகும் விடப்பட்ட சவால் ஆகும். இந்த நாட்டில் நமது அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 21 மற்றும் சரத்து 19 ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் வகையில் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோரின் நடவடிக்கைகள் இருந்தன நமது அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 19 ஆனது என்ன கூறுகின்றது என்றால்
    என்னவென்றால் நாம் கூட்டம் போடவும், சுததிரமாக நமது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , நாம் நமக்கு பிடித்த தொழிலை செய்யவும் இந்த போலி ஜனநாயக நாட்டிலே உரமை உண்டு அந்த உரிமையை கூட தட்டி பிரிக்கும் காரியத்தை தான் இந்த அரசியல் பிழைப்பு வாதிகள் செய்தார்கள் என்ற்றால் அது மிகையானது அல்ல என்றே கூறலாம்.நாம் தமிழகர்கள் தான் நமது கலாசாரம் 2000 ஆண்டுகள் பழமையானது தான் ,இருந்த போதிலும் நாம் நமது நிகழ கால உண்மை நிலையை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் அதை விடுத்து வெறுமனே புறநானூறில் கற்பனைக்காக சொல்லப்பட்ட முறத்தால் புலியை அடித்து விரட்டிய தமிழச்சியை மட்டுமே நாம் கணக்கில் எடுத்து கொள்ளாமல் நிகழ் கால சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்து கொண்டு உண்மையை ஒத்து கொள்ள வேண்டும் , குஷ்பூ ஒரு வாதத்தை வைக்கும் போது நாமும் பதில் வாதத்தை வைக்க அதுவும் நாகரிகமான முறையில் வைக்க கடமை பட்டுள்ளோம். யாருக்கும் எந்த கருத்தையும் சொல்ல முழு உரிமை உள்ளது அந்த உரிமையை பலவந்தமாக பறிக்காமல் நாம் அந்த கருத்து எந்த அளவிற்கு பொய்யானது என்பதை நாகரிகமான முறையில் பதில் கூற வேண்டும். இது போன்று ஒருவர் சொன்ன கருத்திற்காக அவரை மன்னிப்பு கேட்க்க சொல்வதும் அவரை வேறு பல வகையில் துன்புர்த்துவதும் சமுக நீதிக்கு எதிரனதகவும் ப்ஜ்ப் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு சாதகமானதாகவும் எதாவது யாராவது இந்து கடவுளையோ , சமியார்களையோ நாம் விமர்சனம் செய்தால் கூட அதற்க்கு எதிராக உன் தலையை எடுத்து விடுவேன் , உன் நாக்கை அறுத்து விடுவேன் என்று சொல்ல கொடிய நிலையை இந்த போக்கு கொண்டு வந்து விடும் என்பது மறக்க முடியாத உண்மை. இது போன்ற பாசிச போக்குகளுக்கு நாம் எப்போதும் எதிராகவே இருக்க வேண்டும்

  8. pattappa says:

    குஷ்புவுக்கு இவ்வளவு ஆதரவு தேவையா? ஆறு ஆண்டுகள் சின்ன வீடாக வாழ்ந்தவர் குஷ்பு. \”இப்போதெல்லாம் படித்த ஆண்கள் யாரும் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண் இதற்கு முன்பு உறவில் ஈடுபடாத வர்ஜினாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பது குஷ்புவின் இன்னொரு கருத்து.
    இதை எந்த மாமியாரும் ஏற்பார்களா? \”குஷ்பு சொன்னபடி நம் மருமகள் கன்னி கழிந்தவளாக் இருந்தால்- . \” என் மருமகள் வர்ஜினாக இல்லாவிட்டால் பிழை இல்லை\” என மாமனார்-மாமியார் ஏற்க முடியுமா? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் குஷ்பு கன்னா பின்னா என உளறாமல் இருப்பது நல்லது.இருண்ட பக்கஙளைக் கொன்டவர்கள் மவுனமாக இருப்பதே சிறந்த்து.

  9. imapsycho says:

    இதர்க்கு பெயர் தான் செர்ருப்படி என்பது !!!
    இன்னும் நன்ட்ராக உரைக்கும் படி அடிதிர்ருகலாம் !!

  10. manimanik says:

    பெண்கள் போக பொருளாக உபயோகபட, வியாபார பொருளாக பயன்படுத்தப்பட பாதுகாப்பான உடலுறவு மிகவும் அவசியம். Let us prepare!!!!

  11. Mahashank says:

    Dear Mr Gnani,
    Yes. You are damn right. We are surrounded with pseudo tamilists. They are one bunch of hypocrites. I am happy that some one like you is there to refresh our memories and expose such fake people.
    I am with you like many others.
    All the best

    Shankar

  12. Anandsep6 says:

    \”இப்போதெல்லாம் படித்த ஆண்கள் யாரும் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண் இதற்கு முன்பு உறவில் ஈடுபடாத வர்ஜினாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பது குஷ்புவின் இன்னொரு கருத்து.\”
    How can I accept this comment of hers which she has made on behalf of men(like me) who cannot accept this fact?

  13. paraacbe says:

    தமிழ் பற்றாளன் என்ற பெயரில் ,தங்களது கருத்தே ஒட்டுமொத்த தமிழரின் கருத்து என்று பொய் வேடம் போடும் பகடதறிகளுக்கு செருப்படி

  14. vigneshkumar says:

    சார் மன்னிக்கவும்,
    குஸ்பு கருத்துரிமை விடையத்தில் முதலில் துணிந்து கூற்மையாக கேல்வி கேட்டி தலையிட்டவர் சக தொழிலாளி சுகாசினி இந்த விடையத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்ரும் அவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்,
    பலர் அந்த நேரத்தில் அராஜக அயோக்கிய அரசியல் போராட்டத்திற்கு பயந்து கடுமையாக கேல்வி கேட்லவில்லை. சுகாசனி முன்வந்தார் அவர் நடத்திக்கொண்டு இருந்த நிகழ்ச்சியும் துண்டிக்கப்பட்டது. சுகாசனி தமிழர்களுக்கு கொம்பு முழைத்துள்ளதா? என்று கேட்ட தாக திரிக்கப்பட்டது அவ்வாரே கருனானிதி கூட பேசினார்.
    சுகாசனியின் துடிப்பும் அவர் கேட்ட சில நியாயமா கேல்விகளும் தனி ஒ பக்கத்தில் பாராட்டதக்கது.
    ராமதாஸ் திருமாக்களுக்கு என்ன கொம்பா முழைத்துள்ளது என்ற ரீதியில் அவர் கேட்டது அவருடைய கருத்துரிமைக்கான நியாயம் பாராட்டத்தக்கது.
    பார்பனர் ஆறியர் என்று சொல்லி மனித வாயை அடைப்பது கண்டிக்கத்தக்கது.
    இதை நீங்கள் வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை சிந்தித்தால் போது.

  15. bilal says:

    orae oru kaelvi. ungal veettil ungal magaloo alladhu maganoo kushbu sonndaiyum tharboodhaya uchaneedimanra theerpayaum matrum ungaludaya indha karuthu aadharavayum oru munnudhaaranamaaga kondu adhu poola nadandhaal neengal varavaerpeergala? matrum TMMK kurithu yaezhudhi irukkireergal. naan muslaim yaenra kaaranathinaal koorugiraen. oruvar Muslim aa illayaa yaenra theermaanam yedukkum mudivai andha karchikkoo alladhu andha katchiyai saerndhavargalukkoo yaarum tharavillai. kodukkavum mudiyaadu yaenbadhai therivithu kolgiraen. summa vilambara stunt kaaga avargal veliyitta, veliyidugira arikkaiyai vaithukondu idhu poola thayavu seidu yezhudaadeergal. muslim yaenbadhu avaravar seyalil velipada vaendum. (appdai paarthaal indru thannai muslim yaenru solli kolgira yaarumae muslim alla yaenbadhu vaeru vishayam).

  16. thiruji says:

    அப்படியே, லீனா மனிமேகலை பற்றிய இந்து மக்கள் கட்சியின் தற்போதைய உரிமை மீறலை கன்டித்து எழுதியிருக்கலாமே…. அந்த பிரச்னையில் லீனாவுக்கு தானே உஙகள் ஆதரவு…..?

  17. vigneshkumar says:

    குஸ்பு கருத்துரிமை விடையத்தில் முக்கிய கேல்வி?
    குஸ்புவுக்கு முன் தமிழ் பத்திரிகைகளில் கணவர் அல்லாத ஆண் நண்பருடன் தி மு செக்சுக்கு ஆதரவாக யாரும் கருத்து சொன்நதே இல்லையா? அப்பொ எங்கே இந்த கலாச்சார காவலர்கள்.
    கற்பு,பண்பாடு தமிழர் மரபு இவைகளுக்கு எதிராக கருத்துக்களை சொல்லாமா? என்பது தான் இந்த தீர்பில் தெரிய வேண்டிய முக்கிய விடை?
    கருத்துரிமைக்கு எதிராக மிரட்டும் சர்வாதிகார ரவுடி கட்சி இயங்களை தடை முதலில் பரிந்துரை வேண்டாமா?
    கருதுரிமையை நான் ஜனனாய அரசியல் முரைக்கே முக்கியமானதாக மதிக்கின்றேன்.
    சிங்களர்களை தமிழர் விரோதி என்ற ரீதியில் பிரச்சாரம் செய்த சீமான் சிங்கள இன பூஜாவை வைத்து படம் எடுத்தார்.
    சாமியாருக்கு மட்டும் தான் 420 அரசியல் வாதி சீமான் ராம் தாஸ் போன்றவர்களுக்கு எல்லாம் இல்லீங்களா?
    தனக்கொரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்ற சிரந்த மனித சமத்துவ ஜனனாயகத்துவ விதிக்கே தமிழகம் பெரிய எடுத்துக்காட்டாகவும் வருங்காலத்தில் வரலாம்.
    கருத்துரிமையை எதிர்கும் அமுக்குராஜா கலாச்சார வாதிகளில் அறுகதை கேல்விக்கு உரியது.அவர்கள் தீர்பை ஏற்க வில்லை என்ற கருத்து சொல்வதை நிருத்த முடியுமா?
    குஸ்புவும் மற்ற தமிழ் பெண்களும் இனி தொடர்ந்து கற்பு பண்பாடு இவைகளுக்கு எதிராக தங்களுக்கு கருதுக்கள் இருந்தால் நியா நானா போன்ற நிகழ்ச்சிகளில் விவாதிக்கலாமா?

  18. vigneshkumar says:

    . [மறப்மோம் மன்னிப்பொம்] என்ற அபத்த பொது தத்துவதில் இருந்து தலைபு மாரி இருப்பது சிரப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம் என்ற தலைப்பில் கருத்துரிமைக்கு ஆதரவாக எழுதியது பாராட்டத்தக்கது.
    சாதி மதவாத கட்சிகளை தடை செய்யவேண்டும் என்று பதில் தந்தீர்கள் அது போல் கருத்துரிமைக்கு எதிரான கட்சிகளை தடை செய்யவேண்டும் என்று முக்கியமாக பரிந்துரை செய்யுங்கள்.
    [சீமான் ராமதாஸ் போன்றவர்களுக்கு எல்லாம் அஞ்ஜாமல் இனி தமிழ் பெண்களும் இந்திய பெண்களும் கற்பு கற்பித்தனங்களுக்கு எதிராகவும் தங்கள் கருத்தை சொல்லாம் என்ற வரியை நீங்கள் எழுதி இருந்தால் சிறப்பாக இருக்கும்.]

Leave a Reply

Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between Tamil and English)
  • அணு உலை வேண்டாம் என்பதை அரசு மதிக்காததைக் கண்டித்து வாக்காளர் அட்டையை திருப்பித்தரும் போராட்டம்

    • இதையும் அரசு அலட்சியப்படுத்தினாலும், உலக கவனத்தை ஈர்க்க நிச்சயம் செய்யவேண்டும் (100%, 1 Votes)
    • இதையும் அரசு அலட்சியப்படுத்தும் என்பதால் செய்வச்தில் பயனில்லை. (0%, 0 Votes)

    Total Voters: 1

  • இந்த இணையதளம் காந்தி பிறந்த நாளான 2 அக்டோபர் 2008 வியாழன் இரவு இந்திய நேரம் 9.11 மணிக்கு இயங்கத் துவங்கியது.