Gnani Photo
  beta

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்

An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

கேணி மார்ச் 10 மாலை 4 மணிக்கு

முதல் பக்கம்...

கேணி சந்திப்பு: மார்ச் 10 ஞாயிறு மாலை 4 மணி: பணி ஓய்வு பெறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு உரையாடுகிறார். இடம்: கேணி வளாகம், 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78. அன்புடன் அழைப்பது ஞாநி, பாஸ்கர் சக்தி


7 Responses to “கேணி மார்ச் 10 மாலை 4 மணிக்கு”

  1. Kalavathi says:

    அண்ணா, கேணிக்கு பெண்களுக்கு அனுமதி உண்டா? கேணி ஆடிடோரியம் கொள்ளளவு எவ்வளவு? மாதர் சங்கத்தை சேர்த்த நாங்கள் குழுவாக வரலாமா? தயவு செய்து தெரிவுக்கவும்.

    ஞாநி பதில்: முதல் கேள்வி வேதனையாக இருக்கிறது. பெண்களுக்கு அனுமதி இல்லாத எந்த நிகழ்ச்சியையும் என் வாழ்நாளில் நான் எப்போதும் நடத்தியதும் இல்லை. கலந்துகொண்டதுமில்லை. இது திறந்த வெளி நிகழ்ச்சி. தாராளமாகக் குழுவாக வரலாம்.

  2. murugan says:

    கேணி கூட்டம் என்றல் என்ன

    ஞாநி பதில்: கலைஞர் கருணாநிதி நகரில் மே 2009ல் குடிபெயர்ந்து வந்ததும் இந்த வீட்டில் என்னைக் கவர்ந்த முதல் விஷ்யம் பின்னால் உள்ள தோட்டப்பகுதியும் கிணறும்தான். அந்தச் சூழல் அங்கே தொடர்ந்து கூட்டங்கள் நடத்தலாமென என்னையும் நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியையும் தூண்டியது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறன்று மாலை 4 மணிக்குக் கூட்டம் நடத்தி வருகிறோம். சுமார் 30 பேர் வருவார்கள் என்று எண்ணி தொடங்கிய விஷயம் ஓரிரு மாதங்களிலேயே 200 பேர் வரும் நிகழ்வாகிவிட்டது.

  3. MuthuRaja says:

    Oru Murai Azhagirisamy salai varai vanthu Idathai kandubidikka theriyamal MilkyWay Icecream parlour varai vanthuvittu thirumbi vitten ..Nichyam Intha varam pangu petre agavendum

  4. Sundar says:

    உரையாடுகிறாரா? உரையாற்றுகிறாரா? பதிவு செய்து பங்கேற்பது எவ்வாறு?
    ஞாநி பதில்: இரண்டும். நிகழ்ச்சிக்கு வந்து உங்களிடம் வீடியோ கேமராவோ ஆடியோ ரிக்கார்டரோ இருந்தால் உட்கார்ந்த இடத்திலிருந்து பதிவு செய்துகொண்டு செல்லலாம். அவ்வளவுதான். ஒரு நிகழ்வுக்கு வந்து உங்கள் செல்போன் எண்ணைக் ஒடுத்துவிட்டிர்களானால் அடுத்த நிக்ழ்விலிருந்து தகவல் குறுஞ் செய்தி வரும். அது கூட யார் விருந்தினர் என்று அறியத்தான். மற்றபடி கேணி கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4 மணிக்கு.

  5. கேணி வளாகத்துக்கு வருவதற்கு ஏதும் முக்கிய அடையாளம் உள்ளதா? எளிதில் கண்டுபிடித்து விடலாமா? விசாரித்து வருவதற்குத் தொடர்பு எண் ஏதும் தர முடியுமா?

    ஞாநி பதில்: 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர் என்ற முகவரி போதும. வாசலில் கேணி என்ற பெயர்ப் பலகை கார் ஷெட்டின் மீது தொங்கிக் கொண்டிருக்கும்.

  6. Gopal says:

    தலைவரே,
    ஒவ்வொரு மாதமும், மானசீகமாக நான் கேணியில் இருக்கிறேன்.

    ஞாநி பதில்: இந்த மாதமாவது முடிந்தால் நேரில் வரலாமே.

  7. Madhavan says:

    தெளிவான வீடியோ பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்க ஞானி என் போன்ற வெளிமாவட்ட வாசகர்கள் மிகுந்த பயன் அடைவார்கள்.

    ஞாநி பதில்: அது எங்கள் வேலை அல்ல. பல முறை சொல்லிவிட்டேன். சென்னையில் நாங்கள் கேணி நடத்துவது நேரடி அனுபவத்தை வழங்க மட்டும்தான். வருபவர்கள் யார் வேண்டுமானாலும் பதிவு செய்து இணையத்தில் போடலாம். ஆனால் நாங்கள் அந்த வேலையை செய்வதற்கில்லை. அது எங்கள் நோக்கம் அல்ல. நேரடி அனுபவத்தை தருவதே நோக்கம்

Leave a Reply

Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between Tamil and English)
  • அணு உலை வேண்டாம் என்பதை அரசு மதிக்காததைக் கண்டித்து வாக்காளர் அட்டையை திருப்பித்தரும் போராட்டம்

    • இதையும் அரசு அலட்சியப்படுத்தினாலும், உலக கவனத்தை ஈர்க்க நிச்சயம் செய்யவேண்டும் (100%, 1 Votes)
    • இதையும் அரசு அலட்சியப்படுத்தும் என்பதால் செய்வச்தில் பயனில்லை. (0%, 0 Votes)

    Total Voters: 1

  • இந்த இணையதளம் காந்தி பிறந்த நாளான 2 அக்டோபர் 2008 வியாழன் இரவு இந்திய நேரம் 9.11 மணிக்கு இயங்கத் துவங்கியது.