
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்

This is the site of Gnani tamil writer, journalist, theatre person, film maker.
(From November 29,2008, Gnani writes an article in English occasionally on current affairs.) now available to read: How to stop terrorism : appeal to Advani Hotel Taj : icon of whose India ?

ஓ பக்கங்கள்
மக்கள் மன்றத்தின் கேள்விகள்
2.7.2009
------------------------------------------------
கேணி
இலக்கிய சந்திப்புக்கான களம்
ஜூலை 12 ஞாயிறு மாலை 4.30 மணி:
பங்கேற்பவர் : பிரபஞ்சன்
|
அண்மையில் கலைஞர் கருணாநிதி நகருக்கு வீடு மாறி குடியேறியிருக்கிறேன். இந்த வீட்டின் பின்னால் அழகான கிணறும் தோட்டமுமாகவும் உள்ளது.
அந்த கிணற்றடியினை நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில் கேணி என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை நானும் நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுமாக உருவாக்கியுள்ளோம்.
நல்ல சிறுகதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளைப் படித்து ரசிக்கும் பழக்கத்தையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் இளைய தலைமுறை சிநேகிதர்களிடம் ஊக்குவிப்பது தொடர்பாக கேணி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு துவங்கி 6.30 வரை ஒரு படைப்பாளியோ, வாசகரோ இலக்கியம் தொடர்பான பகிர்வாக முதலில் பேசுவார். தொடர்ந்து எல்லாரும் அவருடன் கல்ந்து உரையாடும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
ஜூன் 14 ஞாயிறு மாலை 4.30க்கு நடந்த இதன் முதல் கூட்டத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எனக்கு பிடித்த சிறுகதைகள் பற்றி பேசினார். சுமார் 60 அன்பர்கள் பங்கேற்றுக் கலந்துரையாடினர்.
அடுத்த கூட்டம்: ஜூலை 12 ஞாயிறு மாலை சரியாக 4.30 மணி. இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர் சென்னை 78 .
|
|
வணக்கம்.
இது என் கருத்துக்களை உங்களுடன் பகிர்வதற்கான இடம். பொது வெளியில் முழு நேர கருத்தாளனாகக் கடந்த 34 வருடங்களாக இயங்கி வரும் என் கருத்துக்களை, இதுவரை எழுதியவற்றை, இனி எழுதுபவற்றை, வெவ்வேறு செயல்பாடுகளின் பதிவுகள் எல்லாவற்றையும் ஒரு கூரையின் கீழ் மெல்ல மெல்லக் கொண்டு வர வேண்டும் என்று என் இளம் நண்பர்கள் விரும்புவதால் இங்கே வந்திருக்கிறேன்.
பத்திரிக்கை, நாடகம், சின்னத்திரை, பெரிய திரை, பயிலரங்கங்கள் என்று பல்வேறு தளங்களில் செயல் பட்டு வருகிறேன். மனித வாழ்வைத் தொடும் அனைத்தின் மீதும் எனக்கு உள்ள அக்கறையே, பல தடைகளையும் மீறி என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.
என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை. என் இணைய வீட்டுக்கு நீங்கள் வந்திருப்பதற்கு நன்றி.
 அக்டோபர் 2008
------------------------------------------------------------------------
இந்த இணையதளம் காந்தி பிறந்த நாளான அக்டோபர்-2 வியாழன் இரவு இந்திய நேரம் 9.11 மணிக்கு இயங்கத் துவங்கியது.
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi
|
|
|